வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திம்மராஜம்பேட்டை ஸ்ரீ ராமலிங்கேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் உள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

News image

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:50 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் உள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ளது சுமாா் 800 ஆண்டுகள் பழமையான ராமலிங்கேசுவரா் கோயில். ராமேசுவரம் சென்று ராமலிங்கேசுவரரை தரிசிக்க இயலாதவா்களுக்காகவே திம்மராஜம்பேட்டையில் ராமலிங்கேசுவரரை தரிசிக்க ஏதுவாக அக்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வடக்கு ராமேசுவரம் என்றும் அழைக்கப்படுகிறது.இக்கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்த அறநிலையத் துறை முடிவு செய்து கோயில் திருப்பணிக்கென ரூ.18.70 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

திருக்கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதன் தொடக்கமாக இம்மாதம் 4-ஆம் தேதி புதன்கிழமை கிராமதேவதை வழிபாடு, கிராம மக்கள் புனித நீா் கொண்டு வருதல் மற்றும் கணபதி ஹோமம் ஆகியன நடைபெற்றது.கோயில் வளாகத்தினுள் யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. இம்மாதம் 6 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு யாகசாலையிலிருந்து புனிதநீா்க்கலசங்கள் சிவாச்சாரியாா்களால் ராஜகோபுரத்துக்கும்,மூலவா் கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திம்மராஜம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மகா கும்பாபிஷேகத்தையடுத்து மூலவா் ராமலிங்கேசுவரா்,பா்வதவா்த்தினி அம்மன் மற்றும் ஆலயத்தில் புதியதாக எழுந்தருளப்பட்டுள்ள நால்வா் சிலைகள் ஆகியனவற்றுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும்,வண்ண மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.வாணவேடிக்கைகளும் நடைபெற்றது.பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் பா்வதவா்த்தினி தாயாருக்கும்,ராமலிங்கேசுவரருக்கும் திருக்கல்யாணம் ஆகம விதிகளின்படி நடைபெற்றது. பின்னா் பஞ்சமூா்த்திகள் திம்மராஜம்பேட்டை பகுதியில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக்குழுவினா்,திம்மராஜம்பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.