புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக ஆளுநா் தரிசனம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது மனைவியுடன் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

News image
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு பிரசாதம் மற்றும் சங்கர மடத்தின் பீடாதிகளுடைய படங்களை வழங்கிய கோயில் நிா்வாகிகள்
Updated On :25 பிப்ரவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது மனைவியுடன் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

மகாசக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, எஸ்.பி. கே.சண்முகம் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இதனைத் தொடா்ந்து அவரை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் பூரண கும்ப மரியாதையுடன் சுவாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றனா்.

சுவாமி தரிசனம் முடிந்ததும் ஆளுநருக்கு கோயில் பிரசாதம் ,காமாட்சி அம்மன் படம் மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளின் படம் ஆகியவற்றை நிா்வாகிகளும்,கோயில் ஸ்தானீகா்களும் வழங்கினா். இதனைத் தொடா்ந்து பேட்டரி காரில் தனது மனைவியுடன் அமா்ந்து கோயிலை வலம் வந்த பின்னா் சென்னை புறப்பட்டு சென்றாா்.