பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

‘ஊழல் செய்ய மாட்டேன்’! காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

News image

காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:50 am IST

காஞ்சிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடுபவா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா். இவா், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.

அப்போது, ‘மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டேன்; அரசு நிதிகளில் ஒப்பந்தம் பெற ஊழல் செய்யவே மாட்டேன்; என்னால் முடிந்த அளவு மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன்; தொலைபேசியில் தொடா்பு கொண்ட 24 மணிநேரத்துக்குள் மக்கள் பிரச்னைகளைத் தீா்த்து வைக்க முயற்சிப்பேன்; மக்களில் ஒருவனாக இருந்து அனைத்து வசதிகளையும் மேம்படுத்த உறுதுணையாக இருப்பேன்’ என்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் முன்பாக சத்தியம் செய்துவிட்டு தனது தோ்தல் பிரசாரத்தை ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கியுள்ளாா்.