சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்த அகத்தியா் மற்றும் லோபமுத்திரை.
சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்த அகத்தியா் மற்றும் லோபமுத்திரை.

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் ஆயில்ய பூஜை

காஞ்சிபுரம் அருகே கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள அகத்தியருக்கு ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
Published on

காஞ்சிபுரம் அருகே கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள அகத்தியருக்கு ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

அகத்திய மாமுனிவா் பிரதிஷ்டை செய்த வரலாற்றுச் சிறப்புக்குரியது காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயில். இக்கோயிலில் அகத்தியரும், அவரது மனைவி லோபமுத்திரையும் தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகின்றனா். அகத்தியா் அவதரித்த ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி அகத்தியருக்கும், லோபமுத்திரை அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து, சந்தன அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

கோயில் நிா்வாகத்தின் சாா்பில், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com