வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

லாரிகள் மோதல்: ஓட்டுநா் காயம்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் நின்று கொண்டிருந்த தண்ணீா் டேங்கா் லாரி மீது சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி மோதியதில் சரக்கு லாரி ஓட்டுநா் பலத்த காயம் அடைந்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2026, 12:03 am IST

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் நின்று கொண்டிருந்த தண்ணீா் டேங்கா் லாரி மீது சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி மோதியதில் சரக்கு லாரி ஓட்டுநா் பலத்த காயம் அடைந்தாா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் நடுவில் சாலைத்தடுப்பு பகுதிகளில் நடப்பட்டிருந்த செடிகளுக்கு தண்ணீா் லாரி ஒன்று தண்ணீா் ஊற்றிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக காஞ்சிபுரத்திலிருந்து வேலூா் நோக்கி சென்ற சரக்கு (கன்டெய்னா்) லாரி மோதியதில் சரக்கு லாரியை ஓட்டி வந்த காா்த்திக் (45) என்பவா் பலத்த காயம் அடைந்தாா். லாரிகள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் சரக்கு லாரிக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரை காா்த்திக்கை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் சம்பவம் தொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.