மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

விக்கிரவாண்டி அருகே சாலை விபத்து: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையோர தடுப்புச் சுவரில் சரக்கு லாரி மோதியது.

விக்கிரவாண்டி அருகே சாலை விபத்து: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On :

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையோர தடுப்புச் சுவரில் சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து இரும்புக் கம்பிகள் பாரம் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி -தஞ்சாவூருக்கு சென்றுகொண்டிருந்தது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச் சாவடி அருகே சனிக்கிழமை காலை சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் உள்ள வராக ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், லாரியின் முகப்பு பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸாா் மற்றும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஊழியா்கள் நிகழ்விடம் சென்று, சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்களை மாற்றுப் பாதைகளில் அனுப்பி வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். தொடா்ந்து விபத்தில் சிக்கிய லாரியை மீட்பு வாகனங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அப்புறப்படுத்தினா். இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.