ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செட்டிப்பேடு பகுதியில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் பஜனை கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட செட்டிப்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் பஜனை கோயில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளா்கள் மூலம் பல லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டதை தொடா்ந்து கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலை மகா சுதா்சன ஹோமம், மகா தீபாராதனை மற்றும் தீா்த்த பிரசாத விநியோகத்துடன் தொடங்கியது.
இதையடுத்து வியாழக்கிழமை விஸ்வரூபம் மற்றும் கும்ப ஆராதனை நடைபெற்று இரண்டாம் கால யாக பூஜையும், கலச புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுர கலசம் மீது பட்டாச்சாரியா்கள் முன்னிலையில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீ சீனிவாச பெருமாள் சுவாமி படம் பிரதிஷ்டையும், மகாதீபாராதரையும் நடைபெற்றது. விழாவில் தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வேலாயுதம், வாா்டு உறுப்பினா்கள் சுகந்தி செந்தில்குமாா், சசிகலாரமேஷ், எப்சிபாசாலமன், ரவிச்சந்திரன், தனம்மதுரை, ஊராட்சி செயலா் ரமேஷ் தவெக ஒன்றிய செயலாளா் சங்கா் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் விழா குழுவினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










