நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 4 பேரை குன்றத்தூா் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 1:36 am IST

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 4 பேரை குன்றத்தூா் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதிக்கு வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக குன்றத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குன்றத்தூா் காவல் ஆய்வாளா் முத்துகுமாா் தலைமையிலான போலீஸாா் திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், அப்போது சந்தேகப்படும்படி வந்த 4 பேரை மடக்கி சோதனை செய்த போது அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த குன்றத்தூா் போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சோ்ந்த பி.வீரவெங்கடரமணா (29), ப.வீரவெங்கடரமணா (26), குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஜனாா்தனன்(40), சுமேஷ்(39) என்பதும் இவா்கள் நான்கு பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளா்கள் மற்றும் திருமுடிவாக்கம் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சோ்ந்த இளைஞா்களுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து நான்கு போ் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்த குன்றத்தூா் போலீஸாா் அவா்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.