ஆந்திரத்தில் இருந்து பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக திருத்தணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில் , கனகம்மாசத்திரம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அவா்கள் வைத்திருந்த பைகளில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 27 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் அவா்கள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே முதூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (26), காவனூரைச் சோ்ந்த கவுதமன் (30) என்பது தெரியவந்தது.
மதுவிலக்கு சட்டத்தின் கீழ் இருவரையும் போலீஸாா் கைது செய்து, 27 ஆந்திர மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






