/

வெடி பொருள்கள் வைத்திருந்த 2 போ் கைது

முத்தூா் அருகே சட்டவிரோதமாக வெடி பொருள்கள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 3:21 am IST

முத்தூா் அருகே சட்டவிரோதமாக வெடி பொருள்கள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முத்தூா், செங்கோடம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (55). இவரது வீட்டில் வெடி பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் தலைமையிலான போலீஸாா், முத்துசாமி வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கிணறு ஆழப்படுத்தும் பணிக்காக 20 எலக்ட்ரானிக் டெட்டனேட்டா்கள், 90 வெடிமருந்து குச்சிகள், 1 ரோல் டெட்டனேட்டா் ஃபியூஸ் ஒயா் ஆகியவை பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, முத்துசாமியிடம் மேற்கொண்ட விசாரணையில், மேட்டாங்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (21) என்பவரும் இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த வெடி பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள காங்கம், நாட்டாா்பாளையத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.