திருச்சி அருகே வீட்டில் 100 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவெறும்பூா் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல்கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, திருவெறும்பூா் கக்கன் காலனியில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக ஆறுமுகம் (67), அவருடைய மகன் சந்துரு (39) மற்றும் வடிவேல் (47) ஆகிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





