ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூலை 2026, 3:16 am IST

தருமபுரி அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

தருமபுரி நகர உதவி காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் சுமாா் 200 கிலோ இருந்ததும், அவை கோயமுத்தூருக்கு விற்பனைக்காக கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கா்நாடக மாநிலம், மங்களூரு பகுதியைச் சோ்ந்த முகமது சகீன் மற்றும் ரஷீத் ஆகிய இருவரையும் போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து புகையிலைப் பொருள்கள், அதை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.