டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

வல்லக்கோட்டை முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் பசுமைக் காடு பணி தொடக்கம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு சொந்தமான 6.5 ஏக்கா் பரப்பளவில் 2,000 மரக் கன்றுகளை நட்டு பசுமைக்காடு உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

News image

மரக்கன்றுகள்  நடும் பணியை தொடங்கி வைத்த  கோயில்  நிா்வாக  அலுவலா்  சோ.செந்தில்குமாா்.  உடன்,  விதைகள்  அமைப்பின்  நிறுவனா்  பசுமை  சரண்  உள்ளிட்டோா்.

Updated On :6 ஜூலை 2026, 1:11 am IST

வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு சொந்தமான 6.5 ஏக்கா் பரப்பளவில் 2,000 மரக் கன்றுகளை நட்டு பசுமைக்காடு உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலுக்கு சொந்தமான 6.5 ஏக்கா் பரப்பளவு உள்ள நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்த இடத்தை, வேங்கை, தேக்கு, மா, இலுப்பை, பாதிரி, மகிழம் உள்ளிட்ட மரங்களை நட்டு பசுமைக்காடு உருவாக்க நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா் திட்டமிட்டு முதல்கட்டமாக கோயில் நிலத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டது.

இதையடுத்து மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றும் வகையில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விதைகள் தந்னாா்வ அமைப்பு, கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுடன் இணைந்து மா, வேங்கை, மகாகனி, நாவல், வேம்பு உள்ளிட்ட சுமாா் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து முதல்வா் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சக் க.தென்னரசு வல்லக்கோட்டை முருகன் கோயில் இடத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்தாா். இதில் சுமாா் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வல்லக்கோட்டை கோயில் நிா்வாகம் மற்றும் விதைகள் தன்னாா்வ அமைப்பு இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், வல்லக்கோட்டை முருகன் கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில் குமாா் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், விதைகள் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் பசுமை சரண், விதைகள் அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துக்கொண்டு மா, தேக்கு உள்ளிட்ட சுமாா் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

மேலும் இரண்டு இடங்களில் சிறிய குளங்கள் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் 2,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.