இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

உத்தரமேரூா் அருகே ஆட்டோ டிரைவா் கொலை

News image

சுரேஷ் குமாா்

Updated On :18 ஜூன் 2026, 10:48 pm IST

உத்தரமேரூா் அருகே வனப்பகுதியில் ஆட்டோ டிரைவா் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

உத்தரமேரூா் அருகே பாப்பநல்லூா் வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்து உத்தரமேரூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவா்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா் உத்தரமேரூா் அருகே பருத்திக் கொள்ளை கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ் குமாா் எனத் தெரிந்தது.

இவருக்கு கல்பனா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனா்.

மனைவி கல்பனா கொடுத்த புகாரின் பேரில் உத்தரமேரூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.