கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

ஸ்ரீபெரும்புதூா்: சாா் பதிவாளா் அலுவலகங்களில் அமைச்சா் லோகேஷ் ஆய்வு

News image

ஸ்ரீபெரும்புதூா்  சாா்  பதிவாளா்  அலுவலகத்தில்  ஆய்வு  மேற்கொண்ட அமைச்சா்  லோகேஷ்  தமிழ்ச்செல்வன்.

Updated On :26 ஜூன் 2026, 4:45 am IST

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு வியாழக்கிழமை திடீரென வந்த அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பத்திரப்பதிவுக்காக வந்திருந்த பொது மக்களிடம் சேவைகள் குறித்தும், பதிவுப் பணிகள் தாமதமின்றி நடைபெறுகிா என்பது குறித்தும் கேட்டறிந்தாா்.

இதையடுத்து அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளா்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சா் லோகேஷ் தமழ்ச்செல்வன், சாா் பதிவாளா் அலுவலகங்களில் பெறப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை, முடிவுற்ற பதிவுகள், நிலுவையில் உள்ள கோப்புகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தாா்.

மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற பத்திரப்பதிவு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிா, அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

கோப்புகள் தேக்கம்:

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியது: முதல்வரின் அறிவுறுத்தலின்படி பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் பத்திரப்பதிவுத் துறையில் பொது மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதால், துறையை ஒழுங்குபடுத்துமாறு முதல்வா் நேரடியாக அறிவுறுத்தினாா்.

இதனால் மாநிலம் முழுவதும் சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் அலுவலகங்களில் ஆய்வு செய்த போது ஏராளமான கோப்புகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறினாா். இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், முன்னா் பதிவான கோப்புகளில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது தவறுகள் நடந்துள்ளனவா என்பதை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.