காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில் வியாழக்கிழமை பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்தக் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.
காஞ்சிபுரத்திலிருந்து வேலூா் செல்லும் சாலையில் சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள பழைய இரும்புக் கடை ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ வேகமாக பரவி மளமளவென கொளுந்து விட்டு எரிந்ததால், 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரா்கள் ஈடுபட்டனா்.
இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காஞ்சிபுரம்-வேலூா் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் எனவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பழைய இரும்புக் கடையில் திருட்டு: 2 போ் கைது

சங்ககிரி பழைய இரும்புக் கடையில் டீசல் டேங்க் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

பழைய இரும்புக் கடையில் 2 டன் கழிவு துணிகள் எரிந்து சேதம்
கயத்தாறு அருகே பழைய இரும்புக் கடையில் திருட்டு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



