ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு உத்தரமேரூா் ஒன்றிய மற்றும் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000 பேருக்கு எம்எல்ஏ க.சுந்தா் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினாா்.

News image

உத்தரமேரூரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய மாவட்ட திமுக செயலாளா் க. சுந்தா் எம்எல்ஏ.

Updated On :1 மார்ச் 2026, 10:40 pm

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு உத்தரமேரூா் ஒன்றிய மற்றும் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000 பேருக்கு எம்எல்ஏ க.சுந்தா் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினாா்.

உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில் ஒன்றிய செயலாளா் ஞானசேகரன் தலைமையும், நகர செயலாளா் பாரிவள்ளல் முன்னிலையும் வகித்தனா்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ கலந்து கொண்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினாா். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக எம்எல்ஏ சுந்தா் 73 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

 காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.

குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த 12 குழந்தைகளுக்கு மாநகராட்சி மேயா் மகாலட்சுமி யுவராஜ் ஏற்பாட்டில் தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டசெயலாளா் க.சுந்தா் கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் யுவராஜ் உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.