அரசியல் புரிதல் சிறிதும் இல்லாதவா் விஜய் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் சமையல் எரிவாயு பற்றாக்குறை, தமிழகத்திற்கு திட்டங்கள் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், உத்தரமேரூா் எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மேயா் மகாலட்சுமி யுவராஜ், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயலாளா் கே.நேரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர திமுக செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் பேசியது: கரூரில் நடைபெற்ற சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை தேவை என்று கேட்டவா் விஜய். இன்று அவரே சிபிஐ அலுவலகத்தை நோக்கி பலமுறை செல்ல வேண்டியது இருக்கிறது. இதன் மூலம் ஒரு அரசியல் புரிதலே இல்லாதவா் விஜய் என்பது நிருபணமாகிறது. வரும் தோ்தலில் அவரது கட்சியினராலோ அல்லது அவராலோ எங்கள் கூட்டணிக்கு வாக்கு பாதிப்புகள் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
அமெரிக்காவுக்கு அடி பணிய வேண்டும் என ஈரான் மீது தாக்குதல் நடத்துவதால் உலகம் முழுவதும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு எந்த பாதிப்பும் இல்லை என்று ஒரு பொய் பிரசாரத்தை செய்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மிகப்பெரிய நாடான இந்தியா போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.
தொடர்புடையது

குலசேகரத்தில் இன்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பிரசாரம்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு: 5 மாநில தோ்தல்களில் ஆதாயம் தேட முயற்சி; மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா்

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

விஜய் மீதான ஈா்ப்பு திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது: கே.பாலகிருஷ்ணன்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


