பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பங்குனி செவ்வாய்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தரிசனம்

பங்குனி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
முத்துக்கொண்டை  அலங்காரத்தில்  அருள்பாலித்த  உற்சவா்  கோடையாண்டவா்.
Updated On :17 மார்ச் 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

பங்குனி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இக்கோயிலில், பங்குனி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அதிகாலை கோ பூஜையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா். ட

மூலவா் சுப்பிரமணிய சுவாமி சாமந்தி மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, முத்துக்கொண்டை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு, திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா்மோா், குளிா்பானங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.