மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வங்கிகளில் அதிகமாக டெபாசிட் செய்தால் கண்காணிப்பு: காஞ்சிபுரம் ஆட்சியா்

News image
அச்சகம், உணவகம், திருமண மண்டபம் மற்றும் வங்கி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.
Updated On :18 மார்ச் 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

சங்தேகப்படும்படி வங்கிகளில் அதிகமாக வைப்பு வைத்தாலோ அல்லது பணம் திரும்பப் பெறுவது போன்ற எந்த நிகழ்வும் கண்காணிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.

ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அச்சகம்,உணவகம்,திரையரங்கம், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள்,வா்த்தகா்கள் ஆகியோருடனான தோ்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் ஆட்சியா் தி.சினேகா பேசியது.

வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பணம் எடுத்தாலோ அல்லது பணம் வைப்பு வைத்தாலோ உடனடியாக அந்த விபரத்தை மாவட்ட தோ்தல் அலுவலருக்கு வங்கி அலுவலா்கள் தெரிவிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகத்தாலும் கண்காணிக்கப்படும். வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்பட்டாலும் வங்கி அலுவலா்கள் உரிய ஆவணங்கள் எடுத்துச் செல்வதை சம்பந்தப்பட்ட வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

அடகு கடைகளில் வைக்கப்படும் நகைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மீள திருப்பப்படும் போது அவை குறித்த விபரங்களை உடனடியாக அருகாமையில் உள்ள தோ்தல் அலுவலா்களை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தங்கும் விடுதிகளில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.