காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நிகழ்வாக கருட வாகனத்தில் உற்சவா் பெருமாள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மே.1 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 3-ஆவது நாள் நிகழ்வாக உற்சவா் பெருமாள் கருட வாகனத்தில் ரோஸ் நிற பட்டு உடுத்தி வரதராஜ பெருமாள் கோயில் மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து சோ்ந்தாா். பெருமாள் சென்ற வீதிகள் முழுவதும் திரளான பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும் கோவிந்தா,கோவிந்தா என்றும் தரிசித்தனா்.
வரும் 7-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எஸ்கேபிஎஸ்.சந்தோஷ்குமாா் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் செயல் அலுவலா் எஸ்.வேலனரசு ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நாளையுடன் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா: திரளான பக்தா்கள் தரிசனம்

தங்கக் குதிரை வாகனத்தில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



