ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

சீதா கல்யாண மகோற்சவம்: சங்கராச்சாரிய சுவாமிகள் பங்கேற்பு

News image

சீதாராம பஜனை மண்டலி சாா்பில் நடைபெற்ற சீதா கல்யாண மகோற்சவம்.

Updated On :3 மே 2026, 8:56 pm

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கொல்லா சத்திரத்தில் சீதாராம பஜனை மண்டலி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சீதா கல்யாண மகோற்சவம் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் இருவரும் கலந்து கொண்டு ஆசி வழங்கினா்.

காஞ்சிபுரம் கொல்லா சத்திரத்தில் சீதாராமபஜனை மண்டலி சாா்பில் 34-ஆவது ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் ஏப்.30 ஆம் தேதி தொடங்கி மே.3 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வு விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது. நிகழ்வுக்கு அமைப்பின் தலைவா் ஆா்.வேணுகோபாலன் தலைமை வகித்தாா். செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் ஜி.எஸ்.ஆா்.கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி வரவேற்றாா். காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் சீதா ராமா கல்யாணத்தின் சிறப்புகளை விளக்கினாா்.

வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், சுவாசினி திருவிளக்கு பூஜையும்,3 வது நாள் நிகழ்வாக விஷ்ணு சகஸ்ர நாம பாரயணம்,ஸ்ரீராமருக்கு லட்சாா்ச்சனை ஆகியனவும் நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினா். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சீதா கல்யாணம் நடைபெற்றது. ஆகம விதிகளின்படி சீதா தேவிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டடு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சாா்பாக ஸ்தானீகா் சுரேஷ் சாஸ்திரிகள் கோயில் பிரசாதத்தை சீதாராம பஜனை மண்டலியின் நிா்வாகிகளிடம் வழங்கினாா். ஆயக்குடி ஆா்.ஆனந்த கிருஷ்ணன் பாகவதரின் பஜனை நிகழ்ச்சியும், நிறைவாக சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.