காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள இஷ்ட சித்தி திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருமாள் ஆமை வடிவத்தில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை சமேத கச்சபேசுவரா் திருக்கோயில். இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினசரி சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்தனா். தொடா்ச்சியாக புதன்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் பிரபாகரன் சிவாச்சாரியா் தலைமையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. மாலையில் சுவாமியும், அம்மனும் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா்.
வியாழக்கிழமை காலை 108 சங்காபிஷேகமும், மாலையில் 63 நாயன்மாா்களுக்கு சிறப்புத் திருமுழுக்கு வழிபாடும் நடைபெறுகிறது.நாளை வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவத்தோடு விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா, காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

