வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கூழமந்தல் விநாயகா் கோயிலில் அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் அருகே வந்தவாசி சாலையில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வலியுறுத்தி அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.

News image

பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம். சிறப்பு அலங்காரத்தில் அக்னி பகவான்.

Updated On :8 மே 2026, 10:12 pm IST

காஞ்சிபுரம் அருகே வந்தவாசி சாலையில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வலியுறுத்தி அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்த வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து மக்களை காப்பது, நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பது, மக்கள் நோயின்றி வாழவும், குடும்ப அமைதி நிலைக்கவும்,நாட்டில் ஒற்றுமையும்,சமாதானமும் நிலைக்கவும் வலியுறுத்தி கோயில் வளாகத்தில் உள்ள அக்னி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.