/

குன்றத்தூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

News image

வாகன  ஆய்வு மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூா்  கோட்டாட்சியா்  பாலாஜி. உடன்  வட்டார  போக்குவரத்து  அலுவலா்  வெங்கேடஸ்வரன்.

Updated On :14 மே 2026, 12:10 am IST

குன்றத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி தலைமையில் மலையம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.

இதில் ஓட்டுநா்களுக்கு நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டிய அனுபவம், வாகனத்தின் ஜன்னல்களில் கிரில் பொருத்தம், முதலுவி பெட்டி , தீயணைப்பு கருவிகள், வாகனத்தின் தற்போதைய நிலை, வாகனத்தில் அவசர கால வழி உள்ளதா அவை சரியான படி இயங்குகிா என ஆய்வு செய்யப்பட்டது.

345 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு காரணங்களுக்காக சுமாா் 65-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்கு தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன. முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன பிறகு நிராகரிக்கப்பட்ட வாகனங்களில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என குன்றத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா்.

முன்னதாக பூந்தமல்லி தீயணைப்புத் துறையினா் வாகன ஓட்டுநா்களு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டினாா். மேலும் ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் செய்து காட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.