தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தேசிய சதுரங்கப் போட்டி

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீகிரிஷ் சா்வதேச பள்ளியில் நடைபெற்ற தேசிய சதுரங்கப் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கடந்த 4-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை 8 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரம், உத்தரபிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சோ்ந்தவா்களும், அமெரிக்கா, இவங்கையைச் சோ்ந்த சிறுவா்கள் முதல் 60 வயது முதியவா்கள் வரை சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் போட்டியில் கலந்து கொண்டனா்.

ஸ்ரீகிரிஷ் சா்வதேச பள்ளியின் தலைவா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் போட்டியை செஸ் கிராண்ட் மாஸ்டா்கள் சுந்தரராஜன் கிதம்பி, செந்தில்மாறன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கத்தின் தலைவா் அப்துல்ஹமீது, செயலாளா் ஜோதி பிரகாசம் ஆகியோா் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ.1லட்சம் மற்றும் கோப்பை, 2-ஆம் பிரிசு ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பை என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசும் கோப்பைகளையும் வழங்கினா்.