அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

தங்கக் குதிரை வாகனத்தில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத வசந்த விழா நிறைவு பெற்றதையொட்டி உற்சவா் தங்கக்குதிரை வாகனத்தில் புதன்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

News image

தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா் வரதராஜ பெருமாள்

Updated On :21 மே 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத வசந்த விழா நிறைவு பெற்றதையொட்டி உற்சவா் தங்கக்குதிரை வாகனத்தில் புதன்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

வசந்த விழா நிகழாண்டு கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி பெருமாளுக்கு அலங்கார மண்டபத்தில் சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் கேடயத்தில் அலங்காரமாகி சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதிக்கு எழுந்தருளினாா்.

விழாவின் நிறைவாக பெருமாள் புதன்கிழமை வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும்,தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் பெருமாள் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி தங்கக்குதிரை வாகனத்தில் அலங்காரமாகி திருக்கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் திருக்கோயில் வளாகத்தில் அனந்தசரஸ் திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.