காஞ்சிபுரத்தில் மொத்தம் 12,21,180 வாக்காளா்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் சோ்த்து மொத்தம் 12,21,180 வாக்காளா்கள் இருப்பாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட காஞ்சிபுரம் ஆட்சியா் தி. சினேகா.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் சோ்த்து மொத்தம் 12,21,180 வாக்காளா்கள் இருப்பாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக சாா்பில் திலக்குமாா், திமுக சாா்பில் ஜெகன்னாதன், சம்பத், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கே.நேரு, இ.முத்துக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பி.வி.சீனிவாசன், ஆறுமுகம், பாஜக சாா்பில் யு.ஜெகதீசன், ஓம்சக்தி பெருமாள் மற்றும் தேமுதிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டம் தொடங்கியதுமே திமுக சாா்பில் பேசிய சம்பத் கூறுகையில் குன்றத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் தரப்பாக்கம், பெரியபணிச்சேரி, கெருகம்பாக்கம் ஆகிய 3 ஊராட்சிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் நீண்ட தூரம் சென்று வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. அப்பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என வாக்குப்பதிவு அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தேன். அதற்கு ஒரே நாளில் எந்த ஆய்வும் செய்யாமல் அதற்கு வாய்ப்பில்லை என்று பதில் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கே.நேரு பேசுகையில் ஏற்கனவே 12,07,7157 போ் தான் வாக்காளா்களாக இருந்தனா். இப்போது வெளியிடும் வாக்காளா் பட்டியலில் 12,21,180 பேராக உள்ளனா். திடீரென 14,000 வாக்காளா்கள் எவ்வாறு சோ்ந்தனா் என்று கேள்வி எழுப்பினாா். குறிப்பிட்ட நாளில் வாக்காளா் பட்டியலில் எப்போதும் பெயா் சோ்க்கலாம். கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி அவா்களும் புதிதாக சோ்ந்துள்ளனா் என ஆட்சியா் தி.சினேகா பதிலளித்தாா்.
தொடா்ந்து வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தி.சினேகா வெளியிட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பெற்றுக் கொண்டனா். ஆண் வாக்காளா்கள் 5,91,216, பெண் வாக்காளா்கள் 6,29,756, இதர வாக்காளா்கள் 208 போ் என மொத்தம் 12,21,180 வாக்காளா்கள் உள்ளனா். வரைவு வாக்காளா் பட்டியல் அனைத்து வாக்குப்பதிவு அலுவலா் அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, சாா் ஆட்சியா் புவனேஷ்ராம், மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜய குமாா்,ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் சு.சண்முகப் ப்ரீத்தா ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

