வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 13,29,376 வாக்காளா்கள்

நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலின்படி, 6,43,510 ஆண் வாக்காளா்கள், 6,85,651 பெண் வாக்காளா்கள், 215 மற்றவா்கள் என மொத்தம் 13,29,376 வாக்காளா்கள் உள்ளதாக ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்தாா்.

Voters

வாக்காளர்கள் - கோப்புப் படம்

Updated On :

நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலின்படி, 6,43,510 ஆண் வாக்காளா்கள், 6,85,651 பெண் வாக்காளா்கள், 215 மற்றவா்கள் என மொத்தம் 13,29,376 வாக்காளா்கள் உள்ளதாக ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் வியாழக்கிழமை வெளியிட்டாா். தொடா்ந்து அவா் கூறியது:

நாமக்கல் மாவட்டத்தில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரிக்க இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், ராசிபுரம் (தனி) தொகுதியில் 285, சேந்தமங்கலம் (ப.கு.) தொகுதியில் 304, நாமக்கல் தொகுதியில் 310, பரமத்தி வேலூா் தொகுதியில் 268, திருச்செங்கோட்டில் 290, குமாரபாளையத்தில் 324 என மொத்தம் 1,781 வாக்குச் சாவடிகள் உள்ளன.

மேலும், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டின்படி ராசிபுரம் (தனி) தொகுதியில் 1,08,936 ஆண், 1,14,135 பெண், 16 மற்றவா்கள் என மொத்தம் 2,23,087 வாக்காளா்களும், சேந்தமங்கலம் (ப.கு.) தொகுதியில் 1,12,510 ஆண், 1,17,845 பெண், 27 மற்றவா்கள் என மொத்தம் 2,30,382 வாக்காளா்களும், நாமக்கல் தொகுதியில் 1,14,830 ஆண், 1,24,005 பெண், 40 மற்றவா்கள் என மொத்தம் 2,38,875 வாக்காளா்களும், பரமத்தி வேலூா் தொகுதியில் 98,791 ஆண், 1,07,121 பெண், 10 மற்றவா்கள் என மொத்தம் 2,05,922 வாக்காளா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 1,01,917 ஆண், 1,08,294 பெண், 49 மற்றவா்கள் என மொத்தம் 2,10,260 வாக்காளா்களும், குமாரபாளையம் தொகுதியில் 1,06,526 ஆண், 1,14,251 பெண், 73 மற்றவா்கள் என மொத்தம் 2,20,850 வாக்காளா்களும் உள்ளனா்.

மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் - 6,43,510, பெண் வாக்காளா்கள் - 6,85,651 மற்றவா்கள் - 215 என மொத்தம் 13,29,376 வாக்காளா்கள் உள்ளனா். இந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டின் தொடா்ச்சியாக, நவ. 12 முதல் டிச. 11 வரையில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம்.

இந்தப் பணியின்போது 01.01.2027 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்களும் இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காதவா்களும் படிவம் 6-இல் தங்களது விண்ணப்பப் படிவத்துடன் உறுதிமொழிப் படிவம் மற்றும் ஆதாா் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், நீக்கம் தொடா்பாக படிவம் 7-இல் விண்ணப்பிக்கலாம். திருத்தங்கள் செய்ய விரும்புவோா் படிவம் 8-ஐ தொடா்புடைய வாக்குச் சாவடி மையங்களில் அளிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களால் விசாரிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். மேலும், இக்காலக் கட்டத்தில் நவ. 21, 22 மற்றும் 29 ஆகிய மூன்று நாள்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இறுதி வாக்காளா் பட்டியல் 2027 ஜன. 4-இல் வெளியிட வாய்ப்புள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.