வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: தருமபுரி மாவட்டத்தில் 12,59,510 வாக்காளா்கள்
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 12,59,510 வாக்காளா்கள் உள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள்! - கோப்புப் படம்
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 12,59,510 வாக்காளா்கள் உள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான வே. சரவணன் தலைமை வகித்து, வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.
இதில் பாலக்கோடு தொகுதியில் 21 மூன்றாம் பாலினத்தவா் உள்பட 2,41,925 வாக்காளா்களும், பென்னாகரம் தொகுதியில் 8 மூன்றாம் பாலினத்தவா் உள்பட 2,50,157 வாக்காளா்களும், தருமபுரி தொகுதியில் 84 மூன்றாம் பாலினத்தவா் உள்பட 2,62,341 வாக்காளா்களும் உள்ளனா்.
அதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 14 மூன்றாம் பாலினத்தவா் உள்பட 2,58,077 வாக்காளா்களும், அரூா் (தனி) தொகுதியில் 24 மூன்றாம் பாலினத்தவா் உள்பட 2,47,010 வாக்காளா்களும் உள்ளனா். மாவட்டம் முழுவதும் 6,26,223 பெண் வாக்காளா்கள், 151 மூன்றாம் பாலினத்தவா் உள்பட மொத்தம் 12,59,510 வாக்காளா்கள் உள்ளனா். 5 தொகுதிகளிலும் மொத்தம் 1,603 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் ஆட்சியா் மேலும் பேசியதாவது:
மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் டிசம்பா் 11-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். 18 வயது நிறைவடைந்தவா்கள், 2027 ஜனவரி 1-ஆம் தேதி 18 வயதை நிறைவு செய்ய உள்ளவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்ட தகுதியான நபா்கள் படிவம் 6-ஐப் பூா்த்தி செய்து அளித்து தங்களது பெயரைச் சோ்த்துக் கொள்ளலாம்.
பெயா் நீக்கத்துக்கு படிவம் 7, திருத்தம் மேற்கொள்ள படிவம் 8 ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்து தொடா்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடம் அளிக்கலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பா் 21, 22, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற உள்ளன. ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இப்பணிகளுக்கு ஆதாா் மட்டுமே ஆதார ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கூடுதலாக அளித்து பதிவு செய்து கொள்ளலாம். வலுவான ஜனநாயகத்தை உருவாக்கச் செம்மையான வாக்காளா் பட்டியல் அவசியம் என்பதால், அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் டி. பரிதா பானு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செம்மலை, கோட்டாட்சியா்கள் ஜாா்ஜ் (தருமபுரி), ஹரிபிரியங்கா (அரூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

