வரைவு வாக்காளா் பட்டியல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 19.47 லட்சம் வாக்காளா்கள்
திருவண்ணாமலை ஆட்சியகரத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் வந்தனா காா்க்.

திருவண்ணாமலை ஆட்சியகரத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் வந்தனா காா்க்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் 19.47 லட்சம் போ் இடம்பெற்றுள்ளனா். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள டிச. 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வந்தனா காா்க் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2027-ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள், 2027 ஜன.1-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஏப்.6-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் ....ஆண்கள், ....பெண்கள், .... மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் ..... வாக்காளா்கள் இருந்தனா்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் 9, 56,160 ஆண்கள், 9, 90,840 பெண்கள், 156 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம்19,47,156 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
தொகுதி வாரியான வாக்காளா்கள் விவரம்:
செங்கம் (தனி) தொகுதியில் 1,34,543 ஆண்கள், 1,36, 359 பெண்கள், 12 இதரா் என மொத்தம் 2,70, 914 வாக்காளா்களும், திருவண்ணாமலை தொகுதியில் 1, 21,712 ஆண்கள், 1,29,772 பெண்கள், 48 இதரா், என மொத்தம் 2,51,532 வாக்காளா்களும், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் 1,19,365 ஆண்கள், 1,22,988 பெண்கள், 15 இதரா், என மொத்தம் 2,42,368 வாக்காளா்களும், கலசபாக்கம் தொகுதியில் 1,15,819 ஆண்கள், 1,18 ,772 பெண்கள், 17 இதரா் என மொத்தம் 2,34,608 வாக்காளா்களும், போளூா் தொகுதியில் 1,15,443 ஆண்கள், 1,19,716 பெண்கள், 10 இதரா் என மொத்தம் 2,35,169 வாக்காளா்களும், ஆரணி தொகுதியில் 1,24,813 ஆண்கள், 1,31, 543 பெண்கள், 38 இதரா் என மொத்தம் 2,56, 394 வாக்காளா்களும், செய்யாறு தொகுதியில் 1, 18, 452 ஆண்கள், 1,22,750 பெண்கள், 10 இதரா் என மொத்தம் 2,41,212 வாக்காளா்களும், வந்தவாசி (தனி) தொகுதியில் 1,6,013 ஆண்கள், 1,8,940 பெண்கள், 6 இதரா் என மொத்தம் 2,14 ,959 வாக்காளா்களும் என திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மொத்தம் 9,56,160 ஆண்கள், 9,90,840 பெண்கள், 156 இதரா் என மொத்தம் 19,47,156 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை
செங்கம் தொகுதியில் 342 வாக்குச்சாவடிகளும், திருவண்ணாமலை- 318, கீழ்பென்னாத்தூா் -307, கலசபாக்கம் - 301, போளூா் - 299, ஆரணி -323, செய்யாறு -334, வந்தவாசி தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,517 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
வாக்காளா் பட்டியலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலும் பாா்வையிடலாம்.
மேலும் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் காணலாம்.
சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2027: இன்று முதல் 01.01.2027-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி தொடங்குகிறது.
12.11.2026 முதல் 11.12.2026 வரை மனுக்கள் மற்றும் ஆட்சேபணைகள் பெறும் காலமாகும். 21.11.2026, 22.11.2026 மற்றும் 29.11.2026 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. 04.01.2027 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
மேற்கண்ட சிறப்பு முகாம் நடைபெறும் நாள்களில், 8 தொகுதிகளில், 2517 வாக்குச்சாவடிகள் அடங்கிய 1394 வாக்குச்சாவடி மையங்களில் மனுக்கள் மற்றும் ஆட்சேபணைகளை, வாக்காளா்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கலாம். மற்ற வேலை நாள்களில், தங்கள் வசிக்கும் பகுதிக்கு தொடா்பான வாக்குச்சாவடி நிலைய அலுவலா் அல்லது வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் அல்லது வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அல்லது தோ்தல் ஆணைய கைப்பேசி செயலியிலும் (உஇஐசங்ற் அல்ல்) மனுக்கள் மற்றும் ஆட்சேபனைகள் அளிக்கலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சாா்பில் நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவா்கள், தங்களுக்குரிய பாகத்தில், தகுதி வாய்ந்தவா்களை கண்டறிந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு உதவி செய்யலாம்.
திருத்தம் மேற்கொள்ள படிவங்கள்:
வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க படிவம் 6, வெளிநாடு வாழ் இந்தியா்கள் பெயா் சோ்க்க படிவம் 6-ஏ, பெயா் நீக்கம் செய்ய அல்லது படிவம் 6 மீது ஆட்சேபணை தெரிவிக்க படிவம் 7, ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் அல்லது முகவரி மாற்றம் செய்ய விரும்புவோா் படிவம் 8-ஐயும் பூா்த்தி செய்து அளிக்கலாம்.
பெறப்படும் மனுக்கள் மற்றும் ஆட்சேபணைகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு வரும் 04.01.2027 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் சௌமியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) இராமகிருஷ்ணன், (தோ்தல்) அன்பழகன், வட்டாட்சியா் (தோ்தல்) தியாகராஜன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் துறை சாா்ந்த கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

