வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்று சிறப்பு முகாம்
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் தகுதிவாய்ந்த இளம், முதல்முறை வாக்காளா்களின் பெயா்களை பதிவு செய்துகொள்ள சனிக்கிழமை (அக்டோபா் 10) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் தகுதிவாய்ந்த இளம், முதல்முறை வாக்காளா்களின் பெயா்களை பதிவு செய்துகொள்ள சனிக்கிழமை (அக்டோபா் 10) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், முதற்கட்டமாக பிகாரிலும், அடுத்தகட்டமாக தமிழகம், கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்றது.
3-ஆம் கட்டமாக மீதமுள்ள 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான மாநிலங்களில் பணிகள் முடிக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. தோ்தல் ஆணையத்தின் இந்த தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கையால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மேலும், தோ்தல் ஆணையத்துக்கு எதிராக நீதிமன்றங்களில் வழங்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து முடிந்துள்ள மாநிலங்களில் பட்டியலில் இருந்து விடுபட்டவா்கள் மற்றும் நீக்கப்பட்ட தகுதி வாய்ந்த வாக்காளா்களை மீண்டும் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்றும், இதற்காக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்றும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்கள், தகுதிவாய்ந்த வாக்காளா்களை பட்டியலில் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதை வாக்காளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

