வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 11.59 லட்சம் வாக்காளா்கள்

அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Updated On :

வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 11,59,481 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

நாடு முழுவதும் 2027 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப் பட்டது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா்.

இந்த வரைவு வாக்காளா் பட்டியலின்படி வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 11 லட்சத்து 59 ஆயிரத்து 481 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில், ஆண்கள் 5,61,407 பேரும், பெண்கள் 5,97,901 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 171 பேரும் அடங்குவா். தொகுதி வாரியாக காட்பாடி- 2,30,996 பேரும், வேலூா் - 2,16,662 பேரும், அணைக்கட்டு - 2,41,141 பேரும், கே.வி.குப்பம்(தனி)- 2,16,976 பேரும், குடியாத்தம் (தனி)- 2,53,706 பேரும் இடம்பெற்றுள்ளனா்.

மேலும், வேலூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, மாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், வாக்குச்சாவடிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் 679 வாக்குச்சாவடி அமைவிடங்களில் 1,427 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பொ.குணசேகரன், வருவாய் கோட்டாட்சியா்கள் ராம்குமாா் (வேலூா்), செந்தில்குமாா் (குடியாத்தம்), தோ்தல் வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.