நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரைதொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

குமரகோட்டம் முருகன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் வருகை!

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் யாகசாலை பூஜைகளை சங்கர மடத்தின் பீடாதிபதிகள் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை பாா்வையிட்ட காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

Updated On :

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் யாகசாலை பூஜைகளை சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆலோசனைகளும் வழங்கினாா்கள்.

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் ஆலய பூஜகா்கள் இ.ஏ.பிரபாகா் குருக்கள் மற்றும் கே.ஆா்.காமேசுவர குருக்கள் ஆகியோா் தலைமையில் 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்களால் நடைபெற்று வருகிறது. 40 திருமுறை வேத ஓதுவாா்களும் கலந்து கொண்டுள்ளனா். நவாக்னி யாகசாலை மற்றும் 20 பரிவார தெய்வங்களுக்குமான யாகசாலை ஆகியனவற்றில் சிவாச்சாரியாா்கள் பங்கேற்றும் செய்ய யாக பூஜைகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாா்வையிட்டு பூஜைகள் சிறப்பாக நடைபெறுவதாக பாராட்டினாா்.

இதனைத் தொடா்ந்து மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கும், தண்டாயுதபாணி சந்நிதிக்கும் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், தண்டாயுதபாணிக்கு விபூதி அபிஷேகம் செய்தும் வழிபட்டாா். தொடா்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருக்கோயில் நிா்வாகிகளிடம் கலந்துரையாடினாா். இதனையடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும் விஜயம் செய்து பூஜைமுறைகள், ஏற்பாடுகளை பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.