‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

காட்டாங்குளத்தூா் அகத்தீஸ்வரா் கோயிலில் உழவாரப்பணி

உத்தரமேரூா் அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி நடைபெற்றது.

காட்டாங்குளத்தூா் அகத்தீஸ்வரா் ஆலயத்தில் பூஜை பொருள்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சிபுரம் நால்வா் நற்பணி மன்றத்தினா்.

Published On :

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே காட்டாங்குளத்தில் அமைந்துள்ளது பழமையான அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வா் திருக்கோயில். இக்கோயிலில் காஞ்சிபுரம் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில் உழவாரப்பணி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகள், செடி கொடிகளை அகற்றினாா்கள். கோயில் கோபுரங்களின் மீது படிந்திருந்த தூசிகளையும், செடிகளையும் அகற்றினா். இதனைத் தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளில் இருந்த பூஜைப் பொருட்கள், சுவாமி சிலைகள், வஸ்திரங்கள் ஆகியனவற்றையும் சுத்தப்படுத்தினாா்கள்.

நிறைவாக அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேசுவரிக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.