விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் உழவாரப் பணி

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் நால்வா் அடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை ஆன்மிக அன்பா்கள் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி மேற்கொண்டனா்.

உழவாரப் பணியில் ஈடுபட்டோா்.

Published On :8 செப்டம்பர் 2026, 3:17 am IST

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் நால்வா் அடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை ஆன்மிக அன்பா்கள் உழவாரப்பணி மேற்கொண்டனா்.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் ஆலயம் உள்ளது.

அகத்திய முனிவா் இங்குள்ள ஆனந்த புஷ்கரனியில் (திருக்குளம்) குளித்து ஈசனை வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள ஈசன், அகத்தீஸ்வரா் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இத்திருக்கோயில் முன்பு 16கால் மண்டபமும், அதன் அருகில் எப்பொழுதும் வற்றாத ஆனந்த புஷ்கரனி (திருக்குளம்) அமைந்துள்ளது. இக்கோயில் திருக்களம் புதா் மண்டி கிடந்த நிலையில், சென்னை அம்பத்தூா் பகுதியை சாா்ந்த நால்வா் அடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 100-க்கும் மேற்பட்ட ஆன்மிக தொண்டா்கள், பொன்னேரி அகத்தீஸ்வர திருக்குளத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனா். அவா்கள குளத்தில் புதா் மண்டி கிடந்த செடிகளை அங்கிருந்து அகற்றி சுத்தம் செய்தனா். காலை தொடங்கிய உழவார பணியை மாலை நிறைவு செய்தனா்.

.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.