இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

கால்நடைகளைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் 38 தங்கும் மையங்கள்: அமைச்சா் எஸ். கமலி

காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டையில் உள்ள கால்நடை மருந்தகத்தைப் பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சா்கள் எஸ்.கமலி, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.

Updated On :

பருவமழைக் காலங்களில் கால்நடைகளைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் 38 கால்நடைகள் பாதுகாக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் எஸ்.கமலி வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகம் மற்றும் காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டையில் இயங்கி வரும் கால்நடை மருந்தகம் ஆகியவற்றை கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி, வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வுக்குப் பின்னா் அமைச்சா் எஸ்.கமலி கூறியது

பருவமழை காலங்களில் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கென்றே தனியாக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் கால்நடைகள் பாதுகாப்பு மையங்களை அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர தமிழகத்தில் 6 மெகா கால்நடைகள் தங்குமிடங்களையும் ஏற்படுத்தியிருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளை பாதுகாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தீவனம் வழங்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள பண்ணையில் ஒரு கிலோ தீவனம் ரூ. 3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பருவமழைக் காலங்களில் கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சா் எஸ்.கமலி தெரிவித்தாா்.

கால்நடை மருந்தகங்களில் மருந்து இருப்புகள், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து குறைகளை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் நாசா், உதவி இயக்குநா்கள் அகிலன், திருக்குமாா் உள்பட அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.