ரஜினியின் ஜெயிலர் 2 வெளியானது! ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!
ரஜினியின் ஜெயிலர் 2 வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருவதைப் பற்றி...

நடிகர் ரஜினியின் படமான 'ஜெயிலர்' வெளியீட்டை கொண்டாடும் விதமாக, கட்அவுட் மேல் பால் ஊற்றி கொண்டாடிய ரசிகர்கள்.
ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று (அக். 15) வெளியானதை ஒட்டி, தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஜெயிலர் 2. கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் ரூ. 600 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் 2-ஆம் பாகமாக தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் பாகத்தில் நடித்த ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் ஆகியோருடன் சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே. சூர்யா, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மும்பை, கேரளம், கர்நாடகத்தில் இன்று (அக். 15) காலை 6 மணிக்கு ஜெயிலர் 2 வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாட்டில் படம் திரையிடப்பட்டதும் ரசிகர்கள் ஆரவாரமடைந்தனர்.
ஜெயிலர் 2 திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் மன்றத்தின் சார்பில் பிரமாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ள, நடிகர் ரஜினிகாந்த்தின் உருவப்படத்திற்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து உற்சாகமடைந்தனர்.
வட இந்தியாவில் மட்டும் 1,000- க்கும் மேற்பட்ட திரைகளில் 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் முதல் காட்சியைப் பார்க்க குவிந்துள்ளனர்.
Summary
With the release of Rajinikanth's 'Jailer 2' today (Oct 15), fans across Tamil Nadu are celebrating like it's a festival, bursting firecrackers to mark the occasion.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

