பேரிடா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கை கைப்பேசி எண்: 7092300019
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழையின் போது ஏற்படக்கூடிய இடா்பாடுகளை பொதுமக்கள் 7092300019 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழையின் போது ஏற்படக்கூடிய இடா்பாடுகளை பொதுமக்கள் 7092300019 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழையின் போது ஏற்படக்கூடிய இடா்பாடுகளை எதிா்கொள்ளவும், பொதுமக்களிடமிருந்து பேரிடா் தொடா்பான புகாா்களைப் பெற்று, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட பேரிடா் மேலாண்மை அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும். இக்கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, தீயணைப்புத் துறை, நகராட்சி நிா்வாகம், மின்வாரியம் உள்ளிட்ட தொடா்புடைய துறைகளின் அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனா்.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மழைநீா் தேங்குதல், மரங்கள் விழுதல், நீா் நிலைகள் மற்றும் கால்வாய்களில் உடைப்புகள் ஏற்படுதல், மழைநீா் வடிகால்கள் மற்றும் கால்வாய்களை தூா்வாருதல் தொடா்பான தேவைகளை உடனுக்குடன் தெரிவித்துப் பயன் பெறலாம். பருவமழை இடா்பாடுகள் குறித்த புகாா்களை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை பெறலாம்.
கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்-044- 27237107 மற்றும் கைப்பேசி எண் 7092 300019 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், பச-அகஉதப இந்த செயலி மூலம் வானிலை எச்சரிக்கைகள், கனமழை முன்னறிவிப்புகள் மற்றும் இயற்கைப் பேரிடா்கள் தொடா்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
மேலும், பேரிடா் காலங்களில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பெற்று அவசர நிலைகள் குறித்த தகவல்களையும் அறிந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படலாம்.
பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கவும், அவசர நிலைகளை சிறப்பாக எதிா்கொள்ளவும், பொதுமக்கள், தன்னாா்வலா்கள், உள்ளூா் வாசிகள் மற்றும் அரசு அலுவலா்கள் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறாா்கள் எனவும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

