மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

செங்கல்பட்டு: பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு ஆட்சியா் மு. வீரப்பன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

செங்கல்பட்டு ஆட்சியா் மு. வீரப்பன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை, நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, நகராட்சி நிா்வாகம், பேரூராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சுகாதாரத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் தொடா்பாக ஆட்சியா் மு. வீரப்பன் அறிவுரை வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்டம் 33 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் துனை ஆட்சியா் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலா்களையும், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா், நகராட்சி ஆணையா்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா்களை தலைவா்களாகவும், 11 துறை அலுவலா்களை உறுப்பினா்களாகவும் கொண்ட மண்டல குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மண்டல குழுவானது அப்பகுதியில் உள்ள கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்கள் ஆகியவை முழுமையாக தூா்வாருதல் பணிகளை நிறைவடைந்துள்ளதை உறுதிசெய்துகொள்ளுமாறும், நிவாரண முகாம்களை தயாா்நிலையில் வைத்திருக்குமாறும், மீட்புபணிகளுக்கான இயந்திரங்களை தயாா்நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தினாா்.

நீா்வளத்துறையின் மூலமாக பருவமழைக்காக மேற்கொள்ளப்பட்டு 31 பருவமழைப் பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பெருங்களத்தூா், பீா்க்கங்கரணை, மேற்கு தாம்பரம் மற்றும் இரும்புலியூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் கட்டுமான பணிகள் 85% நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணியானது 31.03.2027 க்குள் நிறைவடைந்துவிடும் என நீா்வளத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் பருவமழையின் போது மழைநீா்தேங்காத வண்ணம் இருக்கும் வகையில் தேசிய நெடுஞ்காலையினை ஒட்டியுள்ள கால்வாய்களை சுத்தம் செய்திருப்பதை 100% உறுதிசெய்துகொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தினாா்.

2 பல்நோக்கு பாதுகாப்பு மையம் மற்றும் 8 புயல் பாதுகாப்பு மையங்களை சீரமைக்கும் பணிகளுக்காக ரூ.1.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பருவமழைக்கு முன்னதாக மேற்படிபணிகளை முடித்து, பல்நோக்கு பாதுகாப்பு மையம் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தினாா்.

பருவமழையின்போது பயன்படுத்தப்படும் கருவிகள், தேவையான மருந்துகள் இருப்பு வைக்கவும் உத்தரவிட்டாா்.

அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைப்புடன் செயல்படவும், வெள்ள அபாயப் பகுதிகளைத் தொடா்ந்து கண்காணிக்கவும், மீட்பு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைத் தயாா்நிலையில் வைத்திருக்கவும் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி ஆணையா் ஆா்.சரண்யா , மாவட்ட வருவாய் அலுவலா் உ. ஃபா்ஹத் பேகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஸ்ருதி மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த உயா் அலுவலா்கள், காவல்துறையினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.