பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

அரியலூரில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க வேண்டும்: ஆட்சியா்

சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி.

Published On :

அரியலூா் மாவட்டத்தில், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து பல்வேறு துறை அலுவலா்களுடன் விரிவாகக் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா், அரியலூா் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நோ்வுகளில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஆய்வுக் கூட்டம்: தொடா்ந்து, அவா் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில், கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் முறையாக பின்பற்றுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கனகமாணிக்கம் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.