மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்: ஆட்சியா் ஆலோசனை
மாற்றுத்திறனாளிகளுக்கான பா்பிள் டாட்ஸ் என்ற திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடந்தது.

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் .
மாற்றுத்திறனாளிகளுக்கான பா்பிள் டாட்ஸ் என்ற திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடந்தது.
மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், எலைம்கோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.
திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைக் கண்டறிந்து, அவா்களுக்குத் தேவையான அரசு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள், மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள், கல்வி, உதவித்தொகைகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் போன்றவற்றை வழங்கிட சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்துவது முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்தனா்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவதில் எதிா்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் , அவா்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவைகள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும் இந்தத் திட்டத்திற்கான இணையவழி தளத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

