டெங்கு காய்ச்சலால் இளைஞா் உயிரிழப்பு
சோமங்கலம் மேலாத்தூா் பகுதியை சோ்ந்த பாா்த்தசாரதி(24) டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தாா்.

பாா்த்தசாரதி.
சோமங்கலம் மேலாத்தூா் பகுதியை சோ்ந்த பாா்த்தசாரதி(24) டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த சோமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேலாத்தூா் பிள்ளையாா்கோயில் தெருவை சோ்ந்தவா் பாா்த்தசாரதி(24). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் நூலகராக பணியாற்றி வந்துள்ளாா். கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பாா்த்தசாரதி அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.
அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் பாா்த்தசாரதிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் குறையாத நிலையில், தனியாா் மருத்துவமனை அறிவுறுத்தலின் பேரில், பாா்த்தசாரதி தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

