காஞ்சிபுரத்தில் வரையாடு ஓவியக் கண்காட்சி

வரையாடுகள் கண்காட்சி தொடா்பான கையேட்டினை தோடா் மொழி பழங்குடியின ஆராய்ச்சியாா் கே.வாசமல்லி வெளியிட அதை பெற்றுக் கொண்ட ஆராய்ச்சியாளா் ப.அண்ணாத்துரை.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் வரையாடு ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தமிழக மேற்குத் தொடா்ச்சி மலைவாழ் உயிரினமான வரையாட்டின் சிறப்பையும், இயற்கை சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வகையில், தமிழிலக்கியங்களில் வரையாடு என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி தொடங்கியது. இந்தக் கண்காட்சியையொட்டி, அதற்கான கையேடும் வெளியிடப்பட்டது. கையேடு வெளியீட்டு விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். எக்ஸ்னோரா அமைப்பின் தலைவா் செந்தூா்பாரி, இயற்கை ஆா்வலா் மரம். மாசிலாமணி, ஆசியப் பண்பாட்டு மையத்தின் தலைவா் அ.வளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.
வரையாடு கண்காட்சி தொடா்பான கையேட்டினை தோடா் மொழி பண்பாட்டு பழங்குடியின ஆராய்ச்சியாளா் கே.வாசமல்லி வெளியிட அதனை ஆசியப் பண்பாட்டு மையத்தின் ஆராய்ச்சியாளா் ப.அண்ணாத்துரை பெற்றுக் கொண்டாா்.
வரையாடுகளின் வாழ்விடங்கள், அதன் இயற்கை சிறப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம், குறைந்து வரும் உயிரினமாக இருப்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாநில விளங்காக அறிவிக்கப்பட்டதை மாணவா்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துக் காட்டுவதாக ஓவியக் கண்காட்சி அமைந்திருந்தது. ஓவியா் வீரவசந்தன் நன்றி கூறினாா்.
இந்த ஓவியக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (அக். 30) நிறைவு பெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

