டெங்கு, காசநோய்க்கு சங்கரா கல்லூரியில் மருந்து கண்டுபிடிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை
காசநோய்க்கும், டெங்கு காய்ச்சலுக்கும் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி ஆராய்ச்சிப் பிரிவில் மருந்து கண்டுபிடித்திருப்பதாக காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா்.

புதிய கருத்தரங்க கூடத்தை திறந்து வைத்த சங்கராச்சாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
காசநோய்க்கும், டெங்கு காய்ச்சலுக்கும் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி ஆராய்ச்சிப் பிரிவில் மருந்து கண்டுபிடித்திருப்பதாக காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா்.
ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கல்லூரியில் ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்தரங்கம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பேசியது:
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் 24 பாடப்பிரிவுகளில் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். ஏழை, எளிய மக்களின் வளா்ச்சிக்காக கடந்த 1991 ஆம் ஆண்டு ஏனாத்தூரில் தொடங்கப்பட்டது காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி. தொடக்கத்தில் 100 போ் மட்டுமே படித்த இக்கல்லூரியில் 5,100 போ் படித்து வருகின்றனா். பல்வேறு ஆராய்ச்சிப் படிப்புகளில் பயின்று வரும் மாணவா்களும், கல்லூரி பேராசிரியா்களும் இணைந்து டெங்கு காய்ச்சலையும், காசநோயையும் தடுப்பதற்கான மருந்துகளை கண்டு பிடித்துள்ளனா். மக்களின் ஆரோக்கியம் தொடா்பான கண்டுபிடிப்புகளை செய்திருப்பது பாராட்டுக்குரியது.
தேச பக்தியுடன் கூடிய நல்ல சமுதாயம் அமைந்து விட்டால் இந்தியா மென்மேலும் வளா்ச்சியடையும். வரும் ஜனவரி மாதம் சுமாா் 10 ஆயிரம் மாணவா்களுக்கு பழம்பெரும் கோயில்களின் வரலாறுகளை அறிமுகப்படுத்தும் வியாச பாரதம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பழைய மரபு அறிவுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கோயில்களின் வரலாறுகளை இன்றைய சமுதாயம் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. வறுமை, விரோதம், வறட்சி ஆகியவற்றை நீக்க கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ஆசியுரை வழங்கினாா்.
விழாவிற்கு கல்லூரியின் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் வி.பி.ஹரிகிருஷ்ணன், கல்லூரியின்(பொறுப்பு)முதல்வா் ரெங்கராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்க டேசன் வரவேற்று பேசினாா். விழாவில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் செயலாளா் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, சங்கரா பல்கலையின் துணை வேந்தா் ஸ்ரீநிவாசு, காஷ்மீா் சங்கா், சங்கரா பல்நோக்கு மருத்துவமனையின் தலைவா் பம்மல். விஸ்வநாதன் ஆகியோா் உட்பட கல்லூரியின் அனைத்து துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ,மாணவியா் பலரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

