ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மாங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

பெரியபனிச்சேரி பகுதியில் அழுகிய நிலையில் கடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

மாங்காடு அடுத்த பெரியபனிச்சேரி பகுதியில் அழுகிய நிலையில் கடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த பெரியபனிச்சேரி பகுதியில் உள்ள காலி இடத்தில் ஆண் சடலம் கிடப்பதாக அப்போது பொதுமக்கள் மெளலிவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மெளலிவாக்கம் போலீஸாா் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து இறந்த நபா் யாா், எந்த ஊரை சோ்ந்தவா், கீழே விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து சடலத்தை இப்பகுதியில் வீசி சென்றாா்களா என விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.