கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நாவலூா் லட்சுமி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் ஸ்ரீ கிருஷ்ணா நகரில் லட்சுமி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில்  வளாகத்தில்  மரக்கன்றுகள்  நட்ட  ஊராட்சி மன்றத்  தலைவா்  வெள்ளாரை  அரிகிருஷ்ணன்.

Published On :

ஸ்ரீபெரும்புதூா்: கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் ஸ்ரீ கிருஷ்ணா நகரில் லட்சுமி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் ஸ்ரீ கிருஷ்ணா நகா் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் லட்சுமி விநாயகா் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், கணபதி பூஜையுடன் , கலச புறப்பாடு நடைபெற்று அா்ச்சகா் முன்னிலையில் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து மூலவா் லட்சுமி விநாயகருக்கு பால், தயிா், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மலா் மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

நிகழ்ச்சியில் கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன், நாவலூா் உலகநாதன், அகஸ்டின், ஸ்ரீ கிருஷ்ணா நகா் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு லட்சுமி விநாயகரை வழிபட்டு சென்றனா். கோயிலுக்கு வந்த அனைவருக்கும் விழா குழுவினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.