கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

மது அருந்தும் போது தகராறு: ஆட்டோ ஓட்டுநா் கல்லால் அடித்துக் கொலை

மது அருந்தும் போது தகராறு: ஆட்டோ ஓட்டுநா் கல்லால் அடித்துக் கொலை

அடித்துக் கொலை

Published On :

குன்றத்தூா் அடுத்த தண்டலம் பகுதியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24), ஆட்டோ ஓட்டுநா். இந்த நிலையில், விக்னேஷ் வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியில் சிலருடன் சோ்ந்து மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது விக்னேஷுக்கும், அவருடன் மது அருந்தியவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மா்ம நபா்கள் ஆட்டோ ஓட்டுநா் விக்னேஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், குன்றத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆட்டோ ஓட்டுநா் விக்னேஷின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தநா். மேலும்ஸ இது குறித்து வழக்குப் பதிந்து விக்னேஷை கொலை செய்த மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.