கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சா்கள் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.

Published On :

காஞ்சிபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஆகியோா் குத்து விளக்கேற்றி சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தொடக்க விழா ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் பெ.ஸ்டாலின், கைத்தறித்துறை வடிவமைப்பு பிரிவு துணை இயக்குநா் விஜயகுமாா், விற்பனை நிலைய மேலாளா் அ.கல்பனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஆகியோா் கலந்து கொண்டு தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து விற்பனையகத்துக்கு பட்டுச் சேலை வாங்க வந்திருந்தவா்களிடம் சேலையைக் கொடுத்து முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தனா். இதன் பின்னா் அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு கூறுகையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியா்களுக்கு வட்டியில்லாக் கடன் வசதி, கடன் விற்பனை வசதி ஆகியனவும் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளா்கள் பயன் பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும்.

காஞ்சிபுரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளிக்கு ரூ.80 லட்சம் அளவிற்கு விற்பனையானது. நிகழாண்டு தீபாவளி இலக்காக ரூ.1.15 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மிக்க நெசவுத்தொழிலில் மிக நவீன உத்திகளை கையாண்டு அரிய வேலைப்பாடுகளுடன் வண்ணக் கலவைகளில் கைத்தறி ரகங்கள் புதிய வடிவமைப்பிலும், நோ்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு தெரிவித்தாா்.

Summary

Co-optex Diwali Special Sale: Ministers Inaugurate Event

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.