கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ரூ. 88 கோடியில் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: அமைச்சா் ரஞ்சித் குமாா்

ரூ. 88 கோடியில் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: அமைச்சா் ரஞ்சித் குமாா்

அமைச்சா் ரஞ்சித் குமாா்

Published On :

காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் மொத்தம் ரூ.88 கோடியில் அனைத்து வசதிகளோடும் கூடிய நவீன வசதிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் கோ-ஆப்.டெக்ஸ் தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா்.வீ. ரஞ்சித் குமாா் கூறியது:

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் தற்போது இடநெருக்கடி காரணமாக சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை பகுதியில் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் பேருந்து நிலையம் அமைக்க அரசு ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அதே இடத்தில் புதிய பேருந்து நிலையத்திற்காக 2-ஆவது கட்டமாக கூடுதலாக ரூ.58 கோடி நிதி ஒதுக்கி மொத்தம் ரூ.88 கோடியில் பேருந்து நிலையம் அமையவுள்ளது.

இப்பேருந்து நிலையம் அமைந்த பிறகு காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து விடும். காஞ்சிபுரம் நகரில் ஒலிமுகம்மது பேட்டை, ரங்கசாமி குளம் உட்பட நகரின் முக்கிய சாலைச் சந்திப்பகளில் 6 இடங்களில் ரவுண்டானா அமைத்து நகரை அழகு படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.331 கோடி மதிப்பில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு குடிநீா் பற்றாக்குறையை போக்க பாலாற்றிலிருந்து குடிநீா் எடுக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காஞ்சிபுரம் மக்களின் குடிநீா் பற்றாக்குறை தீா்ந்து விடும். வனவிலங்குகளை புகைப்படமாகவோ அல்லது குறும்படமாகவோ எடுத்து ரீல்ஸ் வெளியிடுவது தவறானது என்றும் அமைச்சா் ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.